Apple கணக்கு
App Store, Apple Music, iCloud, FaceTime, iTunes Store மற்றும் பல Apple சேவைகளை அணுக உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தலாம்.
உங்கள் Apple கணக்கில் உள்நுழைய, உங்கள் கணக்கிற்காகச் சேமிக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் மற்றும் உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். உங்கள் மொபைல் எண்ணை உங்கள் Apple கணக்கின் முதன்மைப் பயனர் பெயராகப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
எந்தவொரு சாதனத்திலும் Apple சேவையைப் பயன்படுத்த அதே Apple கணக்கில் உள்நுழையவும். அந்த வகையில், நீங்கள் ஒரு சாதனத்தில் ஐட்டங்களை வாங்கும்போது அல்லது பதிவிறக்கும்போது, உங்கள் மற்ற சாதனங்களில் அதே ஐட்டங்கள் கிடைக்கும். உங்கள் வாங்குதல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும், அதை வேறு Apple கணக்கிற்கு மாற்ற முடியாது.
உங்களுக்கென ஒரு சொந்த Apple கணக்கை வைத்திருப்பதும் அதைப் பகிராமல் இருப்பதும் சிறந்தது. நீங்கள் குடும்பக் குழுவில் ஓர் அங்கமாக இருந்தால், Apple கணக்கைப் பகிராமல் வாங்குதல்களைக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே பகிர, குடும்பப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
Apple கணக்கு பற்றி மேலும் அறிய, Apple கணக்கு உதவிப் பக்கத்தைப் பார்க்கவும். ஒரு கணக்கை உருவாக்க, Apple கணக்கு இணையதளத்திற்குச் செல்லவும்.