உங்கள் Apple கணக்கில் உள்நுழைதல்

App Store, Apple Music, iCloud, FaceTime, Apple Books மற்றும் பல Apple சேவைகளை அணுக உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.

உங்கள் Apple சாதனத்தை அமைக்கும்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் உள்நுழையலாம்:

  • iPhone அல்லது iPadஇல்: அமைப்புகளுக்கு சென்று Apple கணக்கு என்பதைத் தட்டவும்.

  • Macஇல்: Apple மெனு  > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து சைடுபாரில் உள்ள “உங்கள் Apple கணக்கின் மூலம் உள்நுழைக” என்பதை கிளிக் செய்யவும்.

உங்களிடம் Apple கணக்கு இல்லையென்றால், நீங்கள் ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம்.

உங்கள் பெயர், புகைப்படம், தொடர்புத் தகவல், பாஸ்வேர்டு, பாதுகாப்பு அமைப்புகள், பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் தகவல்கள் உள்ளிட்ட உங்கள் Apple கணக்குத் தகவல்களை நீங்கள் பார்க்கலாம், மாற்றலாம்.

ஒரே Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ள அனைத்துச் சாதனங்களிலும் உங்கள் தகவல்களும் உள்ளடக்கமும் கிடைக்கும். உங்கள் Apple கணக்கில் உள்நுழைதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.